Arputhame歌词由Jeevan Prakash演唱,出自专辑《Thayin Tharisanam》,下面是《Arputhame》完整版歌词!
Arputhame歌词完整版
அற்புதமே ஆரமுதே அன்னை என்னும் ஆதரவே வேளை நகர் ஒளிவிளக்கே வேண்டிடுவோர் நலம் பெருக்கே
புயல் நடுவே நிலைகுலைந்த கலம் தனையே கரைசேர்த்தாய்
நுரை பொங்க பால் குடத்தை நிறை செய்து குறை தீர்த்தாய் அற்பர் எம் வாழ்விலுமே அற்புதங்கள் காட்டிடுவாய்
அன்னை உம் அணைப்பதிலே அனுதினமும் மீட்டிடுவாய்
முடமாகி நடந்தவனைத் திடமாக நடக்கச் செய்தாய்
கடலருகே குடியமர்ந்து புவியெங்கும் பாசம் கொண்டாய்
உடல் உள்ள சோர்வோடு வருந்துவோர் வாடிடுவோர்
பிணி போக்கி பசி நீக்கி புனித வாழ்வில் சேர்த்திடுவாய்