Ilaignyaney歌词由Deeejo&Meiarivu演唱,出自专辑《Ilaignyaney》,下面是《Ilaignyaney》完整版歌词!
Ilaignyaney歌词完整版
இளைஞனே நீ மாறாத வரையிலும்
மாறாது இந்தியாவும்
நீதானே முதுகெலும்பு
பின் ஏனோ கூன் விழுகுது
நேரங்கள் வீணாகுது
காலங்கள் எங்கோ போகுது
அறிவியலும் அரசியலும்
விண்ணை தாண்டி போகுது
தொலைபேசியில் உலகை அடைத்து அது உலகம் என்று நினைத்து
அது உன்னை சிறைபிடித்து
அறியாமை தண்டனை உனக்கு கொடுத்தது
அடிமையா செல்போன் செயலிக்கு தடை செய்தால் தற்கொலை முடிவா
Pubg தான் வாழ்க்கையின் படிப்பா
ராணுவ வீரனை கொஞ்சமாது மதிப்பா
இது ஒரு கொடுமையே
நம் முடிவில் இல்லை வலிமையே
ஒற்றுமை இல்லை ஒழுக்கம் இல்லை வலைத்தளத்தில் சண்டை சண்டை
ஒற்றுமை இல்லை ஒழுக்கம் இல்லை onlineyil சண்டை சண்டை
தலைவருக்கு வைத்தோம் சிலை அதை அவமானப்படுத்துர சிலரை
அவருக்கு எங்கே தண்டனை
நாட்டில் இது தான் பெரிய வேதனை
தொலைநோக்கு பார்வை வேண்டும் பகுத்தறிவு நமக்கு வேண்டும் சொல்லியவரின் சிலை மேலே
சாயம் சாயம் காவிச்சாயம்
அயோத்திதாசரும், பகுத்தறிவாதியும், சட்ட மேதையும், காமராஜரும்,சேகுவேராவும், காஸ்ட்ரோவும், கற்றுக் கொடுத்ததோ மனித நேயம்
நீ கற்றுக்கொண்டதோ மதவாதம்
கற்றுக் கொடுத்ததோ
மனிதநேயம் நீ கற்றுக்கொண்டதோ
மதவாதம்
மத மத மத மதவாதம்
இந்த மண்ணில் இது ஒரு பெரியவாதம்
பல பல தலைவர்கள் வந்தாலும் எங்கே நாம் திருந்தப் போகிறோம்
மத மத மத மதவாதம்
இந்த மண்ணில் இது ஒரு பெரியவாதம்
பல பல தலைவர்கள் வந்தாலும் எங்கே நாம் திருந்தப் போகிறோம்.