Neee歌词由Yuvan Shankar Raja演唱,出自专辑《Yaakkai (Original Motion Picture Soundtrack)》,下面是《Neee》完整版歌词!
Neee歌词完整版
நீ...
என் கண்கள் நாளும்
கேட்கும் தேவதை
உன்னோடு நானும்
வாழ ஏங்க
சொல்லாமல் காதல்
தாக்குதே
என் கண்கள்
உன்னை தேடுதே
கண்ணாடி போல கீருதே
என் ஆவல்
எல்லை மீறுதே
நீ...
நீ பகல் கனவா
என்னை கொல்லும் நினைவா
நான் குழம்புகிறேன்
ஒரு படப்படப்பில்
கொஞ்சம் துடித்துடிப்பில்
கொஞ்சம் நொறுங்குகிறேன்
அடி சிதறுகிறேன்
ஒரு அலை போலவே
என் தோளிலே
நீ சாயும் நேரத்தில்
நான் ஆடி போகிறேன்
பெண்ணே பெண்ணே
உந்தன் பின்னே
நடக்கின்றேன்
கிடக்கின்றேன்
உன் நிழலை போலவே
உன்னை கண்டால்
எந்தன் நெஞ்சம்
நாய்க்குட்டி போல தாவுதே
என் காதல் உந்தன்
காதில் சேருமோ
உன் சுவாச காற்று
என்னை தீண்டுமா
இந்த இதயமொரு
சிறு ஊஞ்சலடி
அது உன் திசையில்
தினம் ஆடுதடி
தினம் அலை பாய்ந்தே
தேடுதே
கை ஜாடை பார்த்து
காதல் வந்ததே
கண்ஜாடை நெஞ்சில்
மோதல் தந்ததே