Thedathey歌词由Rathya&Dhroga演唱,出自专辑《Thedathey》,下面是《Thedathey》完整版歌词!
Thedathey歌词完整版
தேடாதே எங்கு எந்தன் காதல்
தீராதே நானும் கொண்ட ஊடல்
மாறாதே வீசி சென்ற தாபம்
வாராதே நீங்கி சென்ற ஆசை
முன்போல் உன்னை நம்பும் மங்கை இல்லை
உனது பொய்கள் அனைத்தும் தெரிந்தும் விரும்பும் பெண்ணும் இல்லை
உன் போலில்லை பலரில் மோகம் இல்லை
காதல் மலர்ந்து இனியும் விழிநீர் வடிக்கும் எண்ணம் இல்லை
கரங்களை பிடித்து நித்தமும் கடலின் அலையில் நனைத்து திரிந்தேன்
விழி மடல் நனைத்து அவனை நினைத்து நினைத்து புலம்பி கிடந்தேன்
நிமிடங்கள் இழந்து தனிமை தொடர எனது வலிமை மறந்தேன்
பல முகம் தெரிந்தும் இவனை தானே தனியே மனதில் நினைத்தேன்
ஹையோ வேண்டாம் உங்கள் காதல்
பெண்கள் என்றால் ஏனோ தேடல் புரிந்திடநினைப்பாய்
தேடாதே எங்கு எந்தன் காதல்
தீராதே நானும் கொண்ட ஊடல்
மாறாதே வீசி சென்ற தாபம்
வாராதே நீங்கி சென்ற ஆசை
அருகில் தினம் இருந்து சுடர் கொடுத்ததும் வெறும் கல்லாம்
தொலை நகர்ந்து சற்று விலகு இனி நீயும் ஒரு வைரம்
அட எவன் தான் மதிப்பறிந்தான் இருக்கும் வரையிலும் தொலைந்தான்
இவள் தெளிந்தால் மனம் வெறுத்தால் அதை நினைத்து தினம் சிரித்தாள்
வித விதமாய் அவன் (God) படைத்தான் விடுகதையாய் சிலர் கொடுத்தான்
பல விதமாய் புதிர் விடுத்தான் தொடர் அலையாய் புது முகம் தான்
மனம் தெளிவா என உணர்ந்தான் பயிட்சியிலே எனை அறிந்தான்
இவள் வலிமை அவன் புரிந்தான் உணர்வலைகள் ஒரு புயல் தான்
எல்லை இல்லா இல்லா வானம் பார்
எங்கும் அங்கே விண்மீன் தான்
இருந்தும் காதலோ நிலாவில் தான்
காதலின் உவமையும் அதுவே தான்
காதல் என்பார்! இடையில் மோதல் கொள்வார்
விலகி போகும் போது தேடி உருகி காதல் சொல்வார்
நீதான் என்பார் பிறகு நீயும் என்பார்
மனதில் உறுதி இழந்து குழம்பி தவித்து காதல் செய்வார் ஹையோ
இருப்பினை நினைவு படுத்தி கவனம் எடுக்க தேவையில்லை
இரும்பினை போல திடமாய் இருந்தால் யாரும் தேவையில்லை
அனுதினம் வலியை கொடுத்தால் அதனின் பெயரும் காதல் இல்லை
அனுபவம் அனைத்தும் போதும் இனியம் எனக்குள் தேடல் இல்லை
தேடாதே எங்கு எந்தன் காதல்
தீராதே நானும் கொண்ட ஊடல்
மாறாதே வீசி சென்ற தாபம்
வாராதே நீங்கி சென்ற ஆசை
எந்தன் காதலி நீயே எந்தன் பௌணர்னமி என்று சொல்லி
பொய் விண்மீன்களோடு மோகம் கொண்டாய் நீ
உன்னை தானடி நெஞ்சில் கொண்டேன் காதலி
கம்பி கட்டி கட்டி காதல் செய்யும் ஆடவன் தான் நீ