Iraivanidam歌词由Hemambiga singer演唱,出自专辑《Arputhar Punitha Anthoniyar》,下面是《Iraivanidam》完整版歌词!
Iraivanidam歌词完整版
இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே
புதுமைகளைப் புரியும் எங்கள்
புனித அந்தோணியாரே (2)
சரணம் ஐயா சரணம் ஐயா
உந்தன் பாதம் சரணம் ஐயா (2)
தன்னன னான.....
துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
துன்பம் பிணி வறுமைகளைக்
களைபவரும் நீரே
ஆறு மலை காடுகளை கடந்து
வந்தோமே
அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதலும் நீரே
சரணம் ஐயா சரணம் ஐயா உந்தன் பாதம் சரணம் ஐயா (இறைவனிடம்....... )
நற்கருணை மகிமையதை
உணர்த்தியவர் நீரே
நற்சய்தியைப் போதித்த போதகரும் நீரே
உயிருள்ள இயேசுவிற்காய் வாழ்வைத் தந்தாயே
உம்மைப் போல வாழ்ந்து காட்ட
வரம் தருவாய் நீரே
சரணம் ஐயா....
பரிசுத்தம் விளங்குகின்ற லீலிமலர் நீரே
உன்னதமாம் ஏழ்மையின்
மாதிரியும் நீரே
கரமதிலே பாலனையே
சுமந்து நின்றாயே
கருணை கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீயே
சரணம் ஐயா...