Saga歌词由Keerthana Kunalan&Sagishna xavier演唱,出自专辑《Saga》,下面是《Saga》完整版歌词!
Saga歌词完整版
உனைத் தாண்டி போகும் மேகம் சொன்னதோ என் அன்பே நம் காதல் முடிவா?
சகா என் மௌனம் பேசும் பாஷை போலவே என் அன்பே நம் காதல் தவமா?
உயிரிலே கரைகிறேன் தெரிந்தும் நான் பிரிகிறேன்
எரியும் தீப்பிழம்பிலே ஈயைபோல் கருகினேன்
தனிமையே கடந்து தான் போகலாம்
கரையைத்தான் மிதந்து நாம் சேரலாம்
தனிமையே கடந்து தான் பார்க்கலாம்
பயணங்கள் முடியாமல் தொடருமா
ஓயாமலே வேஷம் நீ மாற்றினாய்
பொய் காதலில் ஏக்கம் ஏன் கூட்டினாய்
கை கோர்த்து தான் சிறைக்குள் பூட்டினாய்
உன் நேசத்தால் எனை நீ வாட்டினாய்
உறவே !தூரங்கள் போக திசையாவும் மாற நதி போல நான் பாய்கிறேன்
கனவே காயங்கள் ஆறும் இந்நொடி கூட மாறும்
கயிறு மேலே நான் போகிறேன்
தனிமையே கடந்து தான் போகலாம்
கரையைத்தான் மிதந்து நாம் சேரலாம்
தனிமையே கடந்து தான் பார்க்கலாம்
பயணங்கள் முடியாமல் தொடருமா?