Enakke Enakka歌词由Shyamalangan&Kaavya Jaishankar演唱,出自专辑《Enakke Enakka》,下面是《Enakke Enakka》完整版歌词!
Enakke Enakka歌词完整版
எனக்கே.. எனக்கா..
நீ வேண்டும்.. நீ வேண்டும்..
இதயம் முழுதும் உருகும் நானும் உனதே
விழிகளிலே அரும்புகிறாய் விரும்புகிறேன் நீயும் எனதே
பிரியாதே பிழையும் அழகே
உறங்காதே எனது மனமே
வருவாய் வானமேக மழையாய் மழையாய்
நிலவினில் உணரும் குளிராக வா
நினைவினில் படரும் கனவாக வா
தனிமையில் தொடரும் நிழலாக வா
தளிரென மலரும் மலராக வா
விதிகளை மறந்தே, விடுதலை பெறுதே..
மறுமுறை பிறந்தால்
தீரா காதல் தேடி வா வா
பொழிவேன் நாளும் கூடி மழையாய் மழையாய்
தொலைவினில் உருகும் மெழுகாகிறேன்
விலகிய நொடியே சிலையாகிறேன்
உலையினில் தவழும் அனலாகிறேன்
உயிருடன் நகரும் உனதாகிறேன்
அலையென திரிந்தேன், கனவினில் மிதந்தேன்
அருகினில் அழைத்தேன்
போகா தூரம் போவோம் வா வா
விழுவோம் நாளும் நாமும் மழையாய் மழையாய்