Maayakkari Needhan歌词由Rejoy&Beaulah Jeni演唱,出自专辑《Maayakkari Needhan》,下面是《Maayakkari Needhan》完整版歌词!
Maayakkari Needhan歌词完整版
மாயாவி போல நீயும் என்னைக் கொஞ்சம் கொன்றுபோட
நீ பார்த்த பின்பு நானும் என்னை தானே நானே தேட
கண்ணாடிபார்த்தால் கூட தெரியுது உந்தன் ஜாட
நான் செல்லும் இடம் எல்லாம் பார்த்தேன் உன்னை ரோஜா போல
மகுடம் இழந்து நான் நடுவிலே நின்றபோது
தோள் தூக்கி விட்டாய் என்னை எப்போதுமே கூட நின்று
இரவில் ஒளி இல்லை பகலில் இருள் இல்லை
என்று நானும் குழம்பினேன் இதுதான் காதல் தொல்லை
உன் குரல் கேட்கும் போது தென்றல் என்னை தழுவிச் செல்ல
நீ போகும் பாதையில் நான் வானவில்லாய் காத்திருக்க
நான் சொல்லும் கவிகள் எல்லாம் உன் மனதில் பாட்டாய் கேட்க
தனிமை என்றால் கூட வாழ்ந்திடுவேன் காலம் செல்ல
காகித கப்பல் போல தண்ணியில ஓடுறன்
ஆனாலும் உந்தன் அன்பில் கொஞ்சம் கொஞ்சம் மூழ்குறன்
முத்துக்கு சிப்பி போல மாலைக்கு தேனீர்போல
உனக்கு என்னைப்போல சொல்லும் இந்த வாழ்க்கை கூட
நீ என் காதல்...
உயிர் காட்டும் தேடல்...
நீ என்ன கொஞ்சம் கொஞ்சும் போது எந்தன் உள்ளம் துள்ளுதே
இதயத் துடிப்பே...
நீ பார்க்கும் பார்வையால எனக்கும் கூட வெட்கம் பூக்குதே
காதல் தீயே...
உன்கூட என் மனம் தினம் வாழ ஏங்குதே
உன் பார்வ மொத்தம் எனக்காக வேணுமே
அணு அணுவா உன் காதல் ருசி பார்க்கத் தோணுதே
அன்பே...
கடல் அலை போல இங்க என் மனம் தத்தளிக்க
உன்னைக்கண்டதும் என் முகம் இங்கு செந்தளிக்க
வானத்து நட்சத்திரம் ஒன்று கூடி சொக்கி நிற்க
பாலைவனம் எல்லாம் இனி சோலை போல பூத்து நிற்க
இருள்... சூழ்ந்து... வாழ்க்கை... இனி... போனா...
நிலவொளி... போல... அவ... காப்பா...
இசை... ஓட... வருங்காலம்... போனா...
கவி... போல... வந்து... என்ன... சேர்வா...
நீ என்ன தொட்ட நேரம்
மாறும் எந்தன் வானம்
கண்ணாடி பார்த்தால் கூட
பூக்குதிங்க வெக்கம்
வைரக்கல்ல போல விலை ஏறிப்போனது என் மனம்
என்னைக்குமே மாறாது என் நல்ல குணம்.
மாயக்காரி நீதான் (மாயக்காரி நான் தான்)
அவ ஒரக் கண்ணால் பார்த்தா (நான் ஓரக் கண்ணால் பார்த்தா)
உள்ளுக்குள்ள வேர்த்தா (உள்ளுக்குள்ள வேர்த்தா)
இனி காலம் எல்லாம் நீதான்...
நீதான்...
நீதான்...
மாயாவி போல நீயும் என்னைக் கொஞ்சம் கொன்றுபோட
நீ பார்த்த பின்பு நானும் என்னை தானே நானே தேட
கண்ணாடிபார்த்தால் கூட தெரியுது உந்தன் ஜாட
நான் செல்லும் இடம் எல்லாம் பார்த்தேன் உன்னை ரோஜா போல
அருவி கொட்டும் போது கேட்கும் சத்தம்
என்னைக்கும் தீராது அவளுக்கான காதல் யுத்தம்
ஆணி வேரப் போல ஊன்றி நிற்கும் எங்க நட்பு மட்டும்
வெற்றிக்கு அடித்தளம் அவள் சொன்ன வார்த்தை மட்டும்.
மாயக்காரி நீதான் (மாயக்காரி நான் தான்)
அவ ஒரக் கண்ணால் பார்த்தா (நான் ஓரக் கண்ணால் பார்த்தா)
உள்ளுக்குள்ள வேர்த்தா (உள்ளுக்குள்ள வேர்த்தா)
இனி காலம் எல்லாம் நீதான்...
நீதான்...
நீதான்...