Ival Yaaro歌词由AJ Shangarjan演唱,出自专辑《Ival Yaaro》,下面是《Ival Yaaro》完整版歌词!
Ival Yaaro歌词完整版
இவள் யாரோ இளமைக்குள் நுழைவது ஏனோ
ஆதாரம் அழகிற்கு இவள் இனியோ
மலையோரப் பயணத்தில் ரயிலுக்குள் நானோ
மனசாலே மாட்டிக்கொண்ட ஜெயில் இதுவோ
இவள் யாரோ இளமைக்குள் நுழைவது ஏனோ
ஆதாரம் அழகிற்கு இவள் இனியோ
மலையோரப் பயணத்தில் ரயிலுக்குள் நானோ
மனசாலே மாட்டிக்கொண்ட ஜெயில் இதுவோ
வந்தாளே தேரா
ஆனேனே நாரா
கண்டாலே காதல்
கண்ணாலே தாரா
ஆறுகுள் நீரா
ஆளுக்குள் வாரா
நெஞ்சோடு சேர்ந்து
என்னோடு போறா
விழி ரெண்டும் அவளது அருகினில் தானோ
சட்டென்று பறந்திடும் நிமிடங்களோ
தொடராமல் இறங்கிட இடம் ஓடிப் போகுதே
முடியாத பாதை இல்லை மனம் ஏங்குதே
அவள் செய்கை ஒவ்வொன்றும்
எனக்குள்ளே நின்றிடும்
அவள் கண்ணில் சிக்காமல்தான்
ரசிக்கின்றேன் நான்
தலைமீது கோதிடும்
விரலோடு மோதிரம்
பெயர் ஒன்று சேர்ந்திடத்தான்
துடித்திடும் நெஞ்சம்
யார் இவள் யாரோ
தேவதை தானோ
தேன்மொழி பேசி
கொல்கின்றாளே
பேசிட நானும் ஆசையில் தானே
காரணம் தேடி நிற்கின்றேனே
சாளர ஓரம்
சாரலும் வீச
தூக்கத்தல் சாய்ந்து
சாய்கின்றாளே
இவள் யாரோ இளமைக்குள் நுழைவது ஏனோ
ஆதாரம் அழகிற்கு இவள் இனியோ
மலையோரப் பயணத்தில் ரயிலுக்குள் நானோ
மனசாலே மாட்டிக்கொண்ட ஜெயில் இதுவோ
வந்தாளே தேரா
ஆனேனே நாரா
கண்டாலே காதல்
கண்ணாலே தாரா
ஆறுகுள் நீரா
ஆளுக்குள் வாரா
நெஞ்சோடு சேர்ந்து
என்னோடு போறா