En Kaadhalile歌词由Prezanthi Shanmugavel&Mirun Pradhap演唱,出自专辑《En Kaadhalile》,下面是《En Kaadhalile》完整版歌词!
En Kaadhalile歌词完整版
உள்ளம் புகுந்தாயே
மெல்ல வதைத்தாயே
தினம் நிதம் தோன்றி
மனம் கலைத்தாயே
என்னை சரித்தாயே கர்வம் கரைத்தாயே
உணர்வினைத் தூண்டி
எனை ரசித்தாயே
காதலினால் என்னை தோய்த்திட வா
மோகத்தினால் என்னில் மூழ்கிட வா
தீவிரமாய் என்னுள் தேடிட வா
சீக்கிரமாய் என்னை சேர்ந்திட வா
விழிகளில் மனதை வென்றாயோ
காதலெனும் சுகங்கள் சேர
பிரிவெனும் அவஸ்தை தந்தாயோ
ஏக்கங்களில் விழிகள் வேர்க்க
என்னை கொஞ்சம் மறந்துபோனாயோ
காதல் தரும் வலிகள் வாட்ட
கனவினில் அருகில் வந்தாயோ
போதும் இது நினைத்து மீள
என் காதலிலே உனை வீழ்த்திடவா
என் சேவைகளால் உனை சாய்த்திடவா
என் தாபங்களை செவிசாய்த்திட வா
உன் பார்வையிலே எனை போர்த்திட வா
ஓ காதலின் பாரம் மனதோரம் ரணமாகும் முன்னே நீயும்
வந்திடவேண்டும் என ஏங்கும் விழியோரம் நீரே
மனதுக்குள் தாகம் ஒரு யாகம் உருவாக்கும் காதல் யோகமே
அணைத்திடவேண்டும் சிறைபடுவேன் உன் கைகளிலே
எல்லையில்லாத காதல் வானிலே
உன்னோடு சேர்ந்து பறக்க வேண்டுமே
விழிகளில் மனதை வென்றாயோ
காதலெனும் சுகங்கள் சேர
பிரிவெனும் அவஸ்தை தந்தாயோ
ஏக்கங்களில் விழிகள் வேர்க்க
என்னை கொஞ்சம் மறந்துபோனாயோ
காதல் தரும் வலிகள் வாட்ட
கனவினில் அருகில் வந்தாயோ
போதும் இது நினைத்து மீள
என் காதலிலே உனை வீழ்த்திடவா
என் சேவைகளால் உனை சாய்த்திடவா
என் தாபங்களை செவிசாய்த்திட வா
உன் பார்வையிலே எனை போர்த்திட வா