ENNA PULLA SENJA歌词由Sagishna xavier&Nirjany Srivijay演唱,出自专辑《ENNA PULLA SENJA》,下面是《ENNA PULLA SENJA》完整版歌词!
ENNA PULLA SENJA歌词完整版
என்ன புள்ள செஞ்ச நீ
நெஞ்சுக்குள்ள அணில் ஓட
சிக்குப்பட்ட பஞ்சாட்டம்
தட்டானுக்கு குயில் பாட
ஒத்த பன போல நிண்ணேனே
அட காட்டோரம்
கொக்க தடி போட்டு இழுத்தாயே...
என்ன கண்ணு செஞ்ச நீ
தூக்கங்கெட்டு நடமாட
வெக்க பட்டே வெளையாட
ஏக்க பட்டே நெனப்போட
கிட்டி புள்ளா பறந்து போனேனே
அடி மனசோரம்
செக்கு மாடா சுத்த வச்சாயே...
மீனா தவிச்சே
வல வீசி வழிய மாத்துற
வீணா இருந்தே
தேன் கள்ளா உள்ள ஊறுற
காட்டு முயலா கனவெல்லாம் தாவுற
நீயே மினுக்கா விளக்கேத்தி போவுற
ஒத்த பன போல நிண்ணேனே
அட காட்டோரம்
கொக்க தடி போட்டு இழுத்தாயே...
என்ன கண்ணு செஞ்ச நீ
தூக்கங்கெட்டு நடமாட
வெக்க பட்டே வெளையாட
ஏக்க பட்டே நெனப்போட
நானா இருந்தே
உ நெனப்ப உள்ள ஊத்துற
காணா நூலா
ஏ சட்ட மேல ஏறுற
பாத்தி எடுக்க பலகாலம் போனவன்
மாத்தி விடுற கிறுக்காக ஆனவ
பட்ட மரம் போல நிண்ணேனே
அட காட்டோரம்
வெட்டி வெறவு ஆக செய்தாயே
...
என்ன புள்ள செஞ்ச நீ
நெஞ்சுக்குள்ள அணில் ஓட
சிக்குப்பட்டே பஞ்சாட்டம்
தட்டானுக்கு குயில் பாட
ஒத்த பன போல நிண்ணேனே
அட காட்டோரம்
கொக்க தடி போட்டு இழுத்தாயே...