Pogiren (From Think Specials)歌词由B.Babushankar&Madhumitha Babushankar演唱,出自专辑《Pogiren (From ”Think Specials”)》,下面是《Pogiren (From Think Specials)》完整版歌词!
Pogiren (From Think Specials)歌词完整版
“ நானூறு பக்கங்கள்
நல்ல புத்தகம்
நான்கு வரியில் அதை சொல்ல சொல்கிறாய்
கண் மூடிக் கேட்டால் இசையின் அனுபவம்
கடந்து கொண்டே
ஏதோ பாடிச் செல்கிறாய்
உன் வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
உன் துரித நடையில் மனம் லயிக்கும்
அதனால் தானோ ...
ஒடிக்கொண்டே என்னிடம் காதல் சொல்கிறாய்
போகிறேன் நான் என்னைத் தேடி
உன் போர்வையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் தள்ளி தள்ளி
இது முற்று புள்ளி
உலர்ந்து போகும் முன்னே
உணர்ந்து போகிறேன் ...தேடாதே
நான் யாரென்று
மறந்து போகும் முன்னே
பறந்து போகிறேன்....தேடாதே
போகிறேன் நான் என்னைத் தேடி
உன் போர்வையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் போகிறேன்
வலிக்காத வார்த்தைகள் பேசுவாய்
மலையேறிச் சென்றால் வளைவுகள் உண்டென்பாய்
வரம் என்ன வேண்டுமென்று கேட்கிறாய்
தவம் செய்யும் எண்ணம் எனக்கில்லையே நண்பனே
சிறகுகள் உண்டு
சிறையும் உண்டு
எனக்கென நீ எதை தந்தாய்
உணர்வுகள் முடிந்தால்
உறவுகள் முடியும்
நீயும் நீயும் எனக்கென நான்
ஒரு தீவில் நீயும் நானும் என்று
கண்ட கனவு கலைந்து போகும் இன்று
அதனால் தானோ...
தடம் மாறிப்போக விடை சொல்கிறேன்
அன்பென்னும் நாடகம்
அரங்கேறும் தினம் தினம்
திரை போட நேரம் வந்ததே ...ஏஏ
போகிறேன் நான் என்னைத் தேடி
உன் போர்வையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் தள்ளி தள்ளி
இது முற்று புள்ளி
உலர்ந்து போகும் முன்னே
உணர்ந்து போகிறேன் ...தேடாதே
நான் யாரென்று
மறந்து போகும் முன்னே
பறந்து போகிறேன்....தேடாதே