Soul Killer歌词由Viththakan&Kaeshanth演唱,出自专辑《Soul Killer》,下面是《Soul Killer》完整版歌词!
Soul Killer歌词完整版
கண்ணில் ஈரம் தந்து நெஞ்சில் பாரம் தந்து
தனியாக என்னை விட்டு ஏன் சென்றாய் சகியே
பெண்ணே என் காதல் கண்ணே நீ சொன்ன வார்த்தை எங்கே
உன் மேலே காதல் கொண்ட இதயம் துடிக்க மறக்குது மறுக்குது
பெண்ணே என் காதல் கண்ணே நீ சொன்ன வார்த்தை எங்கே
உன் மேலே காதல் கொண்ட இதயம் துடிக்க மறக்குது மறுக்குது
அடியே Now am a broken heartier
உனையே மறப்பதில் நானும் Loser
வெளியே சிரிப்பதில் பெரிய Joker
தனியா பொலம்புறன் வீசிட்டு போயிட்ட
அன்பா நீ கூப்பிட்ட என் புருசா
ஆனா எங்கடி உன் பாசம் கானல் நீரா
வச்சேன் உச்சில உன்னத்தான் என் உசுரா
இப்ப தந்தாயே சோகத்த நீ பரிசா
Hey hey
என்னை மறந்தெங்கோ பறந்தவள்
என் இதயத்தை கிழித்தவள்
இன்று துணையென என் நிழல்
எங்கும் ஒலிக்குது உன் குரல்
தவித்தேன்
என்னை நானே வெறுத்தேன்
தனிமையை சுமந்தேன்
உறக்கத்தை மறந்தேன்
கவலையை மறைத்தேன்
வெளியிலே சிரித்தேன்
இனியவள் விட்டுச்சென்ற இடத்திலே
உயிருடன் மரித்தேன்
என்னுள் நீயும் தந்தாய் காயம்
ஏங்கினேனே காதலாலே
எந்தன் மனதினை சிதைத்தெங்கோ பறந்தாயே....
Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh
கண்ணில் ஈரம் தந்து நெஞ்சில் பாரம் தந்து
தனியாக என்னை விட்டு ஏன் சென்றாய் சகியே
பெண்ணே என் காதல் கண்ணே நீ சொன்ன வார்த்தை எங்கே
உன் மேலே காதல் கொண்ட இதயம் துடிக்க மறக்குது மறுக்குது
பெண்ணே என் காதல் கண்ணே நீ சொன்ன வார்த்தை எங்கே
உன் மேலே காதல் கொண்ட இதயம் துடிக்க மறக்குது மறுக்குது
தினம் உறக்கமில்லை
உன் முடிவு பிழை
என் நினைவிலே வருகிறாய் விடியும் வரை
இன்று குருதியில் எழுதினேன் ஒரு கவிதை
நடுத்தெருவினில் அலைவதே எனது நிலை
இரு விழிகளை உடைத்திங்கே அடிக்கடி
மழை வரும்
உனக்கென இருந்த என் இதயத்தில் கலவரம்
நினைவுகள் வலம்வர தனிமையே நிரந்தரம்
என்னை விட இன்னொருத்தன் தானே உந்தன் உயர்தரமோ
என்னை காதலித்து வேறொருவன் கை பிடிக்க
தன்னிலை மறந்திங்கே மதுவிலே நான் குளிக்க
தீராத காதல் கொண்டு துரோகத்திலே தத்தளிக்க
நீ சொன்ன பொய்கள் யாவும் தினம் தினம் என்னை கொல்லுதே
என்னுள் நீயும் தந்தாய் காயம்
ஏங்கினேனே காதலாலே
எந்தன் மனதினை சிதைத்தெங்கோ பறந்தாயே....
Oh Oh Oh Oh
அவள் கொடுத்த பரிசு பொய்கள்
கசக்கும் வலிகள் மெய்கள்
அணைக்க துடிக்குதடி
வலிமை இழந்த கைகள்
மறக்க முடியவில்லை
உனது கருவிழிகள்
நினைக்கும் பொழுதிலெலாம் ஆழும் வேதனைகள்
Girl
One day you’ll feel It all
I’m Saying true
உன்னாலே நானானேன் எங்கிலும் Fool
பொய்யாக வாழ்ந்திட You gotta go
என் காதல் பட்டு நீ தெரிஞ்சிக்கோ