Thedinen歌词由Shahithya演唱,出自专辑《Thedinen》,下面是《Thedinen》完整版歌词!
Thedinen歌词完整版
கலகலவென வாழ்ந்த நாட்கள்
பகற்கனவென மறைந்தே போக
அமைதியின் ஒலி கானம் ஆகவே
மாறுதே
துளிதுளிதுளி மழையை போல
கண்ணீரும் நில்லாமல் வழிய
இருட்டறையினில் வெளிச்சம் காணவே
ஏங்கினேனே
தேடினேன் தேடினேன்
என்னை எனக்குள்ளே
தேய்கிறேன் தேய்கிறேன்
என்னை நான் காணாமல்
தோற்கிறேன் தோற்கிறேன்
தனிமை தீயின் முன்னே
தோற்கிறேனே
நிலவில்லா இரவைபோல்
இருண்டாலும் என் வாழ்க்கை
வெய்யோனை எதிர்பார்த்து
காத்திருப்பேன் நானே
இரவெல்லாம் பகலாக
வேகமாய் மாறிடுமே
மாறுமே
படபடவென துடிக்கும் இதயம்
ஒருநாள் நின்றே போகும்
நின்றாலும் நினைவுகள்
அழியாதே
நேரம் மாறும்
நாட்கள் ஓடும்
என்னை துரத்தும்
சோகமும் வீழும்
இதுவும் கானலே
குழந்தை போலவே
பொய் என்றாலும்
நம்பினேனே
தேடினேன் தேடினேன்
என்னை எனக்குள்ளே
தேய்கிறேன் தேய்கிறேன்
நான் காணாமல்
தோற்கிறேன் தோற்கிறேன்
தனிமை தீயின் முன்னே
தோற்கிறேனே
நிலவில்லா இரவைபோல்
இருண்டாலும் என் வாழ்க்கை
வெய்யோனை எதிர்பார்த்து
காத்திருப்பேன் நானே
இரவெல்லாம் பகலாக
வேகமாய் மாறிடுமே
மாறுமே