Bodhai Nee歌词由Mirun Pradhap&Dharshu Prakash&Kaveera演唱,出自专辑《Bodhai Nee》,下面是《Bodhai Nee》完整版歌词!
Bodhai Nee歌词完整版
போர்க்களத்தில் உயிர் துடித்தேன்
உன் கண்ணெதிரில் கரைந்தேன்
நிராயுதமாய் தோற்றுநின்றேன்
என் உதிரமதில் நனைந்தேன்
நீயில்லா ஓர் இருளுலகில்
என் ஜீவன் எங்கும் அலைந்திடுமோ
நீர் காற்றில்லா ஓர் தரையடியில்
என் காயம் மாயம் அடைந்திடுமோ
காத்திருந்தேன் காதலுடன் என்கண்கள் நீதானே
பார்த்திருந்தேன் மடிசாய்ந்திடவே என் ஆசை நீதானே
வந்தென்னை வாரிக் கொண்டாய்
என் காதலில் ஜீவன் தந்தாய்
காதல் கணை மீண்டும் தொடுக்காதே
என்னோடு நீ நின்றாய்
என் பின்னோடு நீ வந்தாய்
மெய்காதல் எனும் பானம் அதில்
பெண்நெஞ்சில் போதை தந்தாய்
என் நெஞ்சை நீ வென்றாய்
என் தோளோடு தோள் தந்தாய்
நெஞ்சுக்குள்ளே காதல் தந்தாய்
பேரின்பம் நீ கண்டாய்
யாருக்கும் அடங்கா அரக்கன் மத்தவங்களுக்கு
உனக்குள் அடங்கி இருக்கேன் தந்த காதலுக்கு
சினத்தால் வனத்தை எரிப்பேன் எந்தன் பலத்திற்கு
இப்போ சிறையில் அடைந்து கிடக்கேன் உந்தன் கண்களுக்கு
என் மனதோ ஆறாத ரண வலிகளில்
உந்தன் காதல் கிடைத்ததும் ஆறியது சில நொடிகளில்
உந்தன் விழி வழியினில் வழிகிற சில கண்ணீரின் வலிகளை அறிகிறேன் எந்தன் உணர்வினில்
போகாதே எந்தன் பாதி மிஞ்சாதே எந்தன் மீதி
லவ் உச்சகட்ட நேரத்தில் எதற்கு இந்த இடைவெளி
சண்டைகள் காதல் மொழி இறக்கும் இடைவெளி
சாரி கேட்டா முடியும் நமது வேர்ல்டுவாறு பாதி
இருவரும் சேர்ந்து வா ஓர் உலகம் படைப்போம்
அந்த உலகத்தில் காதலையே மொழியாய் விதைப்போம்
காத்திருந்த காதலுக்கு விடைகளை கொடுப்போம்
சரி வா அந்த உலகத்திற்கு பறப்போம்
காத்திருந்தேன் காதலுடன் என்கண்கள் நீதானே
பார்த்திருந்தேன் மடிசாய்ந்திடவே என் ஆசை நீதானே
வந்தென்னை வாரிக் கொண்டாய்
என் காதலில் ஜீவன் தந்தாய்
காதல் கணை மீண்டும் தொடுக்காதே
என்னோடு நீ நின்றாய்
என் பின்னோடு நீ வந்தாய்
மெய்காதல் எனும் பானம் அதில்
பெண்நெஞ்சில் போதை தந்தாய்
என் நெஞ்சை நீ வென்றாய்
என் தோளோடு தோள் தந்தாய்
நெஞ்சுக்குள்ளே காதல் தந்தாய்
பேரின்பம் நீ கண்டாய்