Adi Penne (Cover)歌词由Sanjit Lucksman&Cindy Speck演唱,出自专辑《Adi Penne (Cover)》,下面是《Adi Penne (Cover)》完整版歌词!
Adi Penne (Cover)歌词完整版
உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்