KAADHAL ENA KOLGA歌词由Akshayaa&NV Arun演唱,出自专辑《KAADHAL ENA KOLGA》,下面是《KAADHAL ENA KOLGA》完整版歌词!
KAADHAL ENA KOLGA歌词完整版
- காதல் எனக் கொள்க -
திடீரென சிவந்து போவாய்,
திடீரென சிலிர்த்துப் போவாய்,
முதல் முத்தம் ஏங்கிச் சாவாய்,
முதல் யுத்தம் நீயே வெல்வாய்,
நாட்குறிப்பில் தேதி பார்ப்பாய்,
நாட்பகலாய் நேரம் பார்ப்பாய்,
இரவுகள் கொடிது என்பாய்,
இரவதும் இனிது என்பாய்,
நேரம் கிழித்து, தேதி மறந்து,
நாட்கள் பிழைத்து, நாழி கழிந்து,
தொலைந்து போன கடிகாரத்தை எண்ணி காலம் கழித்திருப்பாய்.
கொங்சல் எல்லாம் கவிதை ஆகும்,
கோபம் எல்லாம் சினுங்கல் ஆகும்,
பாடல் வரிகள் புரியத் தொடங்கும்,
பாதிக் கனவில் தூக்கம் தொலையும்.
யாரினதோ குரல்,
யாரினதோ மொழி,
யாரினதோ பெயர்,
யாரினதோ உடல்,
உன் அவரை நினைவூட்டும்,
அவர் வருகை எதிர்பார்க்கும் !
இது எல்லாம் நிகழ்ந்தின்
அது காதல் எனக் கொள்க !